tamilnadu

வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை பலத்த பாதுகாப்பு

தி.மலை,டிச.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதியன்று, 9 ஒன்றியங்களுக்கான முதல் கட்ட தேர்தலில், 82.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டாவது கட்டமாக போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு அரணி ஆகிய 9 ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இந்த 9 ஒன்றியங்களில் போட்டியிடும் 5,580 வேட்பாளர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள, 1590 வாக்குச்சாவடிகளில், 7 லட்சத்து, 61 ஆயிரத்து, 951 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.       இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு  முடிந்த பிறகு வாக்குப் பெட்டி உள்ளிட்ட வாக்குப் பதிவிற்கு தேவையான பொருட்கள் சாக்கு பைகளில் வைத்து கட்டப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்பட 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக் கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் பிரிக்கும் இடத்திலும், வாக்குகள் எண்ணும் இடத்திலும் கம்பு கள் கட்டப்பட்டு தனித்தனி அறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் நாளன்று நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க வாக்கு பிரிக்கும் இடத்திலும், வாக்கு எண்ணும் இடத்தி லும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.