திருவண்ணாமலை, அக். 4- திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் தங்கள் கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி மாவட்ட மற்றும் வட்ட அள விலான அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்து, வியாழக்கிழமை (அக்.3) முதல் இரவு-பக லாக திருவண்ணாமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர். தங்க ளின் நீண்டநாள் கோரிக் கையை நிறைவேற்றக் கோரி முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி களுக்கு, மாத உதவித் தொகை வழங்க கேட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பல முறை மனு கொடுத்தும், அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாறாக கொடுக்கப்பட்ட மனுக்களும், அரசு கோப்பு களில் காணப்படவில்லை. ஏற்கனவே அளித்த மனுவை கண்டுபிடித்து, உதவித்தொகை உத்த ரவு வழங்கும் வரை, காத்தி ருக்கும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடு பட்டுள்ளனர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சி.எ. செல்வம், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.