திருவண்ணாமலை,மே 24-8 வழிச் சாலை அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 20 ஆம் தேதி, சேலம் விமான நிலையத்தில் செய்தி யாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச் சாலை திட்டத்தை அமைத்தே தீருவேன் என பேசியுள்ளார். அவரின் அந்தப் பேச் சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் 8 வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட் டத்தில் கருப்பு கொடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட் டம் கலசபாக்கம் அடுத்த சாலையனூர் கிராமத்தில் வெள்ளியன்று(மே24) கூடிய விவசாயிகள், கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபிராமன் தலைமையில் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் டி.கே. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், கலசபாக்கம் பகுதி செயலாளர், திருமுருகன் உள் ளிட்ட பல இந்த கருப்புக் கொடி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில், விவசாயிகள், மாசிலாமணி, கிருஷ்ணமூர்த்தி, சின்னப் பையன், தீனதயாளன், பச்சையப்பன் ஆகியோர் தங்கள் குடும் பத்தினருடன் இந்த கருப்புக் கொடி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.