tamilnadu

img

முகக்கவசம் தயாரித்த பெண்களுக்கு கூலி கொடுக்காமல் அலைகழிப்பு

திருவள்ளூர், ஜூன் 4-  முகக்கவசம் தைத்துக் கொடுத்த பெண்களுக்கு  3 மாதமாக கூலி கொடுக்கா மல் அரசு நிர்வாகம் அலைகழித்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க, முகக்கவசம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவற்றிற்  கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, மகளிர் சுய உதவி குழு தையல் கலைஞர் கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க திட்டமிடப்  பட்டது. அதன்படி, இதற்கான உத்தரவை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் பிறப்பித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 200 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முகக்கவ சம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதத்தில் 4 லட்சத்து 50 ஆயி ரம் முகக் கவசங்களை சுயஉதவிக்குழுக்கள் தயாரித்து கொடுத்துள்ளன. ஆனால், அதற்கான ஊதியத்தை வழங்க திட்ட  இயக்குனர் நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

ஊதியம் குறித்து கேட்டால், சுய உதவிக்குழு வங்கி கணக்கிற்கு காசோலை  அனுப்பி விட்டதாக கூறுகிறார். ஆனால் வங்கி கணக்கில் பணம் வரவில்லை. ஒரு முகக்கவசத்திற்கு 3 ரூபாய் தையற் கூலி கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒருவர் 100 முகக்கவசங்களை தைக்க முடியும். இப்படி நாள் ஒன்றுக்கு 300 ரூபாய்தான் கிடைக்கும். இந்த தொகையை குழு வங்கி கணக்கிற்கு அனுப்பினால்,  பணத்தை எடுக்க குழுவின் ஊக்குநர், பிரதிநிதி என இருவர் செல்ல வேண்டும். இதனால் தேவை யற்ற கால விரையம் ஏற்படும். எனவே, காலதாமதம் செய்யாமல் அரசு தையல் கூலியை உடனடியாக வழங்க வேண்டும், தையல் கலைஞர்களின் தனிநபர்  வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். இதில் மாவட்ட ஆட்சியர் தலையீடு  செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவள்ளூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.தமிழ் அரசு வலியுறுத்தியுள்ளார்.