திருப்பூர், ஜூன் 15- திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, தமிழக முதல்வரால் வழங் கப்பட உள்ள சுதந்திர தின விழா விருதுக்கு பெண்களுக்காக சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த நபர்கள்(ஆண், பெண் இருபாலர்), நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என அவர் தெரி வித்துள்ளார்.