திருப்பூர், ஜூலை 31– திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி களுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்து வைத்திருக்க பாதுகாப்பு அறை கட்டும் பணி திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்ல டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் நாடாளுமன்றம் மற் றும் சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாது காப்பாக வைப்பதற்கு நிரந்தரப் பாதுகாப்பு அறை கட்டுமானப் பணி பெருந்திட்ட வளாகத்தில் ஒரு ஏக் கர் நிலப்பரப்பில் ரூ.4.95 கோடி செலவில் நடை பெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெள்ளி யன்று பார்வையிட்டார். இதில், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.