tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

திருப்பூர், ஜன. 25 – திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி பகுதிகளி லும் குடிநீர் திட்டப் பணிகள் பற்றி அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. திருப்பூர்  மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்ட அரங்கில் சனியன்று அனைத்துத் துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.விஜ யகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகி ருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள திருப் பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றிய  பகுதிகளில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் திட்டப் பணிகள் தொடர் பாகவும், இப்பகுதிகளில்  வளர்ச் சித்திட்ட பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், உ.தனி யரசு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் திஷா மிட்டல்,  மாவட்ட வரு வாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளாச்சி முகமை யின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், தாராபுரம் சார் ஆட்சி யர் பவன்குமார், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாரய ணன், மாவட்ட வன அலுவலர் திலீப், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொ.சத்தியபாமா, துணைத்தலைவர் சிவகாமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர். ஜல்லிக்கட்டு ஏற்பாடு இக்கூட்டத்திற்குப் பிறகு செய் தியாளர்களிடம் அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: திருப் பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளை களுக்கு இணை இயக்குநர் தலை மையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக் கப்படும். காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய் யப்படும். திருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு கள் நடைபெற்று வருகிறது. காளைகள் பதிவு செய்வதில் குள றுபடிகள் இருப்பதைக் களைய, ஜல்லிக்கட்டு குழுவினரை அழைத்து உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி அனைத்து காளைகளும் பங்கேற்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.