திருப்பூர், டிச. 25 - திருப்பூர் மாநகரம் கல்லம்பாளை யம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மின்சார இழப்பைப் பற்றி மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள் ளாமல் இருக்கிறது. "மின்சார சிக்கனம், தேவை இக்க ணம்!" என்று மின் வாரியமும், அரசு நிர்வாகமும் பொது இடங்களில் விழிப் புணர்வு வாசகம் எழுதி வைத்து பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்ற னர். ஆனால் திருப்பூர் மாநகரில் கல்லம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழுது நீக்கம் செய்தனர். அதன் தொடர்ச்சி யாக கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பகலிலும் எரிந்துள்ளன. மின் மாற்றி பணி செய்யப்பட்டதால் சோதனை அடிப்ப டையில் பகலில் மின் விளக்கை போட்டு வைத்திருப்பார்கள் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நினைத் துள்ளனர். ஆனால் ஒரு நாள், இரண்டு நாள் என ஒரு வார காலத்திற்கு மேலாக அங்கிருந்த வீதி விளக்குகள் இரவு பகலாக 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. நகர் நல அலுவலகம் அருகிலேயே சோடியம் விளக்கும் தொடர்ந்து இதுபோல் எரிந்து கொண்டிருந்திருக்கிறது. அங்கு வரக்கூடிய நகராட்சி பணியா ளர்களும் இதைக் கண்டுகொண்ட தாகத் தெரியவில்லை. இந்த அவல நிலை குறித்து செவ்வாயன்று மாந கராட்சி நிர்வாகத்தில் மின்விளக்கு பராமரிப்பு பிரிவு அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ள னர். அதன் பிறகு கவனிப்பதாக அவர் பதில் கூறியுள்ளார். எனினும் தொடர்ந்து புதன்கிழமை பகலிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருந்தன என்று அப்பகுதி மக்கள் கூறினர்.