tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி திட்டம் - கண்டுகொள்ளப்படாத சாமானிய மக்கள் குடியிருப்பு

திருப்பூர், டிச. 3 - மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டம் என ரூ.1,200 கோடிக்கு மேல் செலவிட்டு திருப்பூரை மிடுக் கான மாநகரமாக அழகுபடுத்தப் போவதாக மத்திய அரசு முதல் மாநகராட்சி நிர்வாகம் வரை தம் பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வாழும் குடியிருப்புகள் “எந்த லட்ச ணத்தில்” உள்ளன என்பதை அம ராவதி நகர் குடியிருப்பு அம்பலப் படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 52 ஆவது வார்டுக்கு உட்பட்டது அமராவதி நகர். சுமார் 18 ஆண் டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இக்குடியிருப்பில் மூன்று வீதிகள் உள்ளன. சுமார் 100 வீடுகள் உள் ளன. இதில் தனி வீடுகள், காம்ப வுண்டுகள் என 600 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தான் திருக்குமரன் நகர் மாநகராட்சி பள்ளியும் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இக்குடியிருப் பிற்கு முறையான சாலை வசதி யும் இல்லை, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதியும் இல்லை. மழை காலம் என்றால் நிலைமை திண் டாட்டம்தான். குண்டும், குழியு மான வீதிகளில் மழைநீரும், சாக் கடை நீரும் கலந்து சேறும், சகதி யுமாக மக்கள் நடமாடவே முடி யாத அளவுக்கு படுமோசமாக மாறி விடுகிறது. இதில் இருசக்கர வாகனங் கள், சைக்கிள்களில் செல்லக்கூடி யோர் சாகசப் பயணம் மேற் கொள்ள வேண்டும். சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந் தைகளின் நிலையோ பரிதாபம். சகதியாக இருக்கும் வீதியில் சைக் கிள் சக்கரங்கள் புதைகுழியில் சிக்குவது போல அழுத்தமாக சிக்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு நாளும் இந்த வீதிகளில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து எழுந்து செல் லும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என இந்த குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து திருக்குமரன் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் பல முறை மாவட்ட ஆட்சியருக்கும், மாநக ராட்சி நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நிரந்தரத் தீர்வும் காணப்பட வில்லை. பிரச்சனையின் தீவி ரம் காரணமாக பெருமளவு மக்கள் திரளும் நிலை ஏற்பட்டால் லாரிக ளில் மண்ணைக் கொண்டு வந்து அங்கே கொட்டிவிட்டுச் செல்வது டன் மாநகராட்சியின் அதிகபட்ச கடமை முடிந்து விடுகிறது. மழைக்காலம் என்றால் இங்கு வசிப்போரின் நிலை அதோகதி தான்! ஒவ்வொரு நாளும் இது போன்ற சகிக்க முடியாத அவலத் தைச் சந்தித்துக் கொண்டிருக்கின் றனர். ஆனால் என்ன காரணத் தாலோ மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 52ஆவது வார்டுக் குட்பட்ட அமராவதி நகர் மட்டு மின்றி திருக்குமரன் நகர், வள்ள லார் நகர், கல்லாங்காடு என உழைக் கும் மக்கள் அடர்த்தியாக வாழும் இந்த பகுதி முழுவதும் சாலை, கழிவுநீர் வடிகால் வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மக்களுக்குத் தேவை யான இந்த அடிப்படை வசதி களை நிறைவேற்றுவதைப் பற்றி பல ஆண்டு காலமாக நட வடிக்கை எடுக்காமல், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என டாம்பீகமான அறிவிப்புகளை வெளியிட்டு அதிலும் சாமானிய வியாபாரி களை பாதிக்கும் திட்டங்களைத் தான் மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்திக் கொண்டிருக்கின் றது. மக்களின் கோபம் கொந்தளிப் பாக மாறி போராட்டமாக மாறக் கூடிய நிலை அமராவதி நகர் போன்ற பகுதிகளில் கனன்று கொண்டிருக்கிறது.  (ந.நி)