tamilnadu

img

கொரோனா இழப்பீடு கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 27- கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியின்போது உயி ரிழந்த வருவாய்த்துறை அலுவ லர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவா ரணத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய் பரவல்  தடுப்புப் பணியில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் குடும் பத்தினருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 100க்கும் மேற் பட்ட துணை ஆட்சியர் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும். வருவாய்த்துறையில் காலி யாக உள்ள அனைத்து நிலை பணியிடங்களையும் போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மூன்று நாட்களாக (ஜூன்24 -26), திருப்பூர் மாவ டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட் சியர் அலுவலகங்கள், வட்டாட் சியர் அலுவலகங்கள் மற்றும் இதர வருவாய்த்துறை அலுவலகங்க ளில் பணிபுரியும்  வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிகளை மேற் கொண்டனர்.

இதன் நிறைவாக வெள்ளி யன்று மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் கி.தயானந் தன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ் சிறப்புரை ஆற்றி னார்.

மாநில செயற்குழு உறுப்பி னர் ப.தங்கவேல், மாவட்ட ஆட்சி யர் அலுவலக நிர்வாகிகள் மோகன், ராஜேந்திரன் உட்பட ஏராளமான வருவாய்த்துறையி னர் பங்கேற்றனர். மாவட்ட பொரு ளாளர் எம்.கண்ணன் நன்றி கூறி னார். இதே கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தருமபுரி

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வெங்கடேஷ்வரன், மாவட்ட துணைத் தலைவர் அசோக்குமார், வட்டத் தலைவர் ஜெயசெல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.