tamilnadu

img

கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெறுக திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் திராவிடர் கழகத்தினர் மனு

திருப்பூர், ஜூலை 29- தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு  திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகா ரியிடம் திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர். இந்த கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிரானது, நவீன குலக்கல்வித் திட்டம், மாநில உரிமைகளுக்கெதி ரானது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியும், நுழைவுத் தேர்வு களை திணிக்கும் வகையிலும் உள்ளது என திருப்பூர் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலரிடம் திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர். குறிப்பாக குழந்தைகள் தங்க ளாகவே பள்ளிக்கல்வி முறையை விட்டு வெளியேற வகை செய்யும். மேலும்  தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய இரு மொழிக் கொள்கையைச் சிதைக் கும் வண்ணம் இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் தன்னுடைய தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக் கொள் ளலாம் என்பதே மோசடியானது. இந்நாட்டின் உழைக்கும் மக்கள்  திரளிலிருந்து அறிவுசார் உயர்வைப்  பெற நினைக்கும் அடுத்த தலை முறையை மீண்டும் அதற்குள்ளேயே தள்ள முயற்சிக்கிறது. தமிழகத்தில் இடைநிற்றலை ஒழிப்பதற்காகவும், 9ஆம் வகுப்பு வரையில் கட்டாயக் கல்வி முறையும், அனைவரும் ஒன்பதாம் வகுப்பு முதல் தேர்ச்சி என்கின்ற சட்டமும் இருந்து வருகின்றன. இவற்றை நீர்த்துப்போகச் செய்யும். நேஷனல் டெஸ்ட் ஏஜென்சியின் நோக்கம் என்பது அடிப்படையில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களை மேற்படிப்புக்குச் செல்ல விடாமல் அங்கேயே தடுத்து  நிறுத்தி, தன்னுடைய குடும்ப, சாதித் தொழில்களையும், தொழில் சார்ந்த  வேலையையும் செய்ய வைப்பதற் கான மறைமுகத் திட்டம் ஆகும். இது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15, 16 க்கும் எதிரானது என்பதை இந்த வரைவு நமக்கு தெளிவுபடுத்துகிறது.  மத்தியில் ஆளக்கூடிய இந்த அரசு முழுவதுமாக முதலாளித்துவத்திற்கும், கார்ப்பரேட்டுக்கும் இந்த நாட்டை யும், இந்த நாட்டின் உரிமையும் அடகு வைக்க கூடிய ஒரு செயலில் இறங்கி கொண்டிருக்கும் வேளை யில்,  கல்வியில் பெரும் முதலாளி கள் உருவாகிவிட்ட இந்த நேரத்தில், பெருமுதலாளிகளின், கார்ப்பரேட்டு களின் கையில் கல்வியைக் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களிடம் பொருளாதாரச் சுரண்டல் மட்டும் செய்ய முனைகிறது என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட்ட மாணவரணி தலைவர் கு.திலீபன், மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன்,செயலாளர் பா.மா.கருணாகரன்,கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன், திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் துரைமுரு கன் உள்ளிட்டோர் மனுக்கள் அளித்த னர்.