திருப்பூர், ஜூலை 22- திருப்பூர் மாநகர பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடைகளை திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதாக மாவட்ட காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரி வித்துள்ளார். திருப்பூர் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தர வின் பேரில் அனைத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட வணி கர்கள், கடைக்காரர்கள், இறைச்சி கடைக்காரர்கள், பேக்கரி, ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகளை யும் அழைத்து திங்களன்று கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மாநகர பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருந்தால் பறக்கும் படை குழுவினரால் ஆய்வு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். இதன் பின்னர் 7 நாட்களுக்கு பிறகே ‘சீல்’ வைக்கப்பட்ட கடையை திறக்க முடியும் என அக்கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.