உடுமலை, ஆக. 10- அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெற்ற மண் டல அளவிலான கால்பந்து சாம்பியன் போட்டிகள் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் வரை நடைபெற்றன. இதில் இளையோர் பிரிவில் ஆந்திராவில் உள்ள கோடுகுண்டா, உத்தரகாண்டில் உள்ள கோரக்கல, மணிப்பூரில் உள்ள இம்பால், ஹரியானாவில் உள்ள ரிவாரி மற்றும் ஒடிசா வில் உள்ள புவனேஸ்வர் பள்ளிகள் பங்கேற்றன. இதில் இம்பால் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. சப் ஜீனியர் பிரிவில் ஆந்திராவில் உள்ள கலிகிரி, பஞ்சா பில் உள்ள கபூர்தலா, இம்பால், ரிவாரி மற்றும் ஜார்கண்டில் உள்ள தில்லையா பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் தில்லையா பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தென் மண்டல ஜெனரல் பி.எம்.ஹரிஸ் கேடயங்களை வழங்கி னார். நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் அமித் குர்குரே, துணை முதல்வர் நிர்பேந்தர் சிங், முன்னாள் அணுசக்தி துணை விஞ்ஞானி வி.சந்திரமௌலி, சீனியர் மாஸ்டர் எஸ்.பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.