திருப்பூர், ஜூன் 24 – பெட்ரோல், டீசல் விலைக ளைத் தொடர்ச்சியாக உயர்த்தி வருவதுடன், மின் கட்டண நிர்ண யத்திலும் அநியாயக் கொள்ளை யில் ஈடுபடும் இதயமற்ற மத்திய, மாநில ஆட்சியாளர்களைக் கண் டித்து திருப்பூர் மாவட்டத்தில் வீதிகள் தோறும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
உலக அளவில் பெட்ரோலி யப் பொருட்கள் விலை குறைந்து வந்தபோதும் மத்திய அரசின் வரிக் கொள்கை காரணமாக தொடர்ச் சியாக கடந்த 9 நாட்களாக பெட் ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் உள் ளிட்டவற்றின் விலைவாசியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எனவே பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மோடி அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் மின் கட்டண நிர் ணயத்தில் அநியாயக் கொள்ளை யில் ஈடுபடும் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், கொரோனா கால பாதிப்பைக் கணக்கில் கொண்டு மின் கட் டண உயர்வை குறைக்க வலியு றுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 24ஆம் தேதி வீதிகள் தோறும் கட்சிக் கிளைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திருப்பூர், வேலம் பாளையம், அவிநாசி, ஊத்துக் குளி, காங்கேயம், தாராபுரம், பொங்கலூர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள் பட அனைத்து நகர, கிராமப்புறப் பகுதிகளிலும் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இதில் சமூக இடை வெளியுடன் கட்சி அணியினர் முகக்கவசம் அணிந்து பங்கேற் றதுடன், மத்திய, மாநில ஆட்சி யாளர்களின் அநியாயக் கட்டண உயர்வுக் கொள்ளையைக் கண் டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், ஒன்றிய கவுன் சிலர் பி.முத்துசாமி உள்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்கமிட்டிச் செயலா ளர்கள், இடைக் கமிட்டி உறுப் பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். திருப் பூர் தெற்கு நகரப் பகுதியில் இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்
. இதே போல் பல பகுதிகளிலும் கோரிக்கை அட்டை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.