tamilnadu

img

முன்னறிவிப்பின்றி பஞ்சாலையில் கதவடைப்பு ஊதியம், உணவின்றி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்

உடுமலை, டிச. 7- மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பஞ் சாலை முன்னறிவிப்பின்றி கதவ டைப்பு செய்யப்பட்டதால் வெளி மாநில தொழிலாளர்கள் ஊதிய மின்றி, ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் வட்டத்திற்குட்பட்ட மைவாடி பகுதியில் கலைவாணி ஸ்பின்னிங் மில் என்ற தனியார் பஞ்சாலை செயல்பட்டு வந்தது. இதனை இந்திரா மில்ஸ் எனப் பெயர் மாற்றி கார்த்திக் மற்றும் விகஸ் என்ற இருவரும் நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டு மின்றி பீகார் மற்றும் ஒரிசா போன்ற வெளி மாநில தொழிலாளர்களும் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். இத்தொழிலா ளர்களுக்கு கடந்த இரண்டு மாதங் களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து முன்னறிவிப்பின்றி ஆலையை மூடி விட்டனர்.  இதனால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. உணவுக்கும் வழியில்லாமல் கைக் குழந்தைகளுடன் தவித்து வருகின் றனர்.  இதற்கிடையில் குடியிருப்பில் மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர். தொழிலாளர்கள் தங்க ளுடைய உணவுக்கு எதுவும் கிடைக் காமல் போனதால் சுரக்காய் இலை தண்டுகளை உணவாக உண்டுள் ளார்கள்.அருகிலுள்ள விவசாயி கள் இத்தொழிலாளர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆலையை ஒப்பந்த அடிப்படை யில் இயக்கி வந்த கார்த்திக் கையும், விகாசையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவுடன் உடுமலை வட்டாட்சியர் அலுவ லக வளாகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனனர். தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் இரவு வரை தொடர்ந்து கொண்டு உள்ளது. மேலும் பசியில் உள்ள குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியது அவ்வழியாக சென்ற அனைவரையும் கண் கழங்க செய்தது