tamilnadu

காங்கேயம் அருகே முறைகேடாக இயக்கப்பட்ட கரி தொட்டி ஆலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், ஜன. 22 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே  பல மாதங்களாக முறைகேடாக இயக்கப் பட்டு வந்த இரண்டு கரி தொட்டி ஆலை களின் மின் இணைப்பை, திருப்பூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் துண்டித் தனர். காங்கேயம் பகுதியில் தேங்காய் தொட்டி களை எரித்து கரித்துண்டுகளாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் சீர் கேடு அடைவதாக பொது மக்கள், விவ சாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். எனினும் சிலர் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கரி  தொட்டி ஆலை அமைத்து, இயக்கி வருவ தாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாசுக்கட்டு்ப்பாட்டு வாரிய அலுவலர்கள் காங்கேயம் வட்டா ரத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனை  மேற்கொண்டனர். இதில் உத்தம பாளையம், சிவன்மலை ஆகிய இடங்களில் கடந்த பல மாதங்களாக முறைகேடாக கரி தொட்டி ஆலை இயக்கப்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு ஆலை களும் நந்தகுமார் மற்றும் பாலசுப்பிரமணி என்போருக்கு சொந்தமானது என தெரியவந்தது.  இந்த ஆலைகளின் மின் இணைப்பை துண்டிப்பதற்காக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மாவட்ட ஆட்சி யருக்கு அறிக்கை அனுப்பினர். சுற்றுச்சூழல்  சீர்கேடு ஏற்படுத்திய இந்த இரு கரி தொட்டி  ஆலைகளின் மின் இணைப்பை துண்டிக்க  நிர்வாக ஒப்புதல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாடு வாரிய அலுவ லர்கள், இரு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்ததாகத் தெரிவித்தனர்.