tamilnadu

img

திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

திருப்பூர், ஆக. 10 – திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்குமாறு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க 3ஆவது மாவட்ட மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. திருப்பூர் ஸ்ரீ காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் சனியன்று மாவட்டத் தலைவர் க.சண்முகம் தலைமையில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பி.மணிவேலு அஞ்சலி தீர்மானம் வாசிக்க, செயற்குழு உறுப்பினர் வி.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சந்திரன் மாநாட் டைத் தொடக்கி வைத்துப்  பேசி னார். செயலாளர் மு.பாலச்சந்திர மூர்த்தி அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் கி.மேகவர்ணன் வரவு செலவு அறிக்கை முன்வைத் தார்.  இம்மாநாட்டில் திருப்பூர் மாந கரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், தாராபுரத் தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும், மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையை திரும்பப்  பெற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உண்மை யான பணமில்லாத சிகிச்சை வசதி வேண்டும், மருத்துவப்படியை ரூ.1000ஆக உயர்த்துவதுடன், காப்பீட்டுத் தொகையை ரூ.150 ஆக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இத்தீர்மானங் களை சங்க நிர்வாகிகள் இரா.நட ராஜன், மின்னல்கொடி, பி.மகு டேஸ்வரன், மாயன்குட்டி ஆகி யோர் முன்மொழிய இம்மாநாட் டில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்டோர் ஏற்றுக் கொண்ட னர். ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் ச.செல்லத் துரை, அகில இந்திய தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்க துணை தலைவர் பா.சௌந்தரபாண்டி யன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சங்கத்தின் மாவட்டத் தலை வராக க.சண்முகம், மாவட்ட செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி, பொருளாளர் கி.மேகவர்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் பி.மணிவேலு, இரா.நடராஜன், பி.மாயன்குட்டி ஆகியோரும், மாவட்ட இணைச் செயலாளர்கள் எம்.பாக்கியம், ராமச்சந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும், மாநில செயற்குழு உறுப்பினராக து.இராஜகோபாலனும் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொரு ளாளர் என்.ஜெயச்சந்திரன் நிறை வுரை ஆற்றினார். இம்மாநாட்டின் நிறைவாக செ.நடராஜன் நன்றி கூறினார்.