tamilnadu

எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

திருப்பூர், பிப். 29 - அனுப்பர்பாளையம் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டிருந்த நிலையில் சனியன்று நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் எவர்சில்வர், செம்பு, பித்தளை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. இதில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள உயர்வு உடன்பாடு ஏற்படுத்துவது தொடர் பான பேச்சுவார்த்தை தொழிற்சங்க கூட்ட மைப்பு நிர்வாகிகள் மற்றும் பாத்திர உற் பத்தியாளர் சங்க நிர்வாகிகள் இடையே கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  கடைசியாக பித்தளை பாத்திரத் தொழி லாளர்களுக்காக நடைபெற்ற 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் தரப்பில் பித்தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர்களுக்கு 30 சதவிகித மும், வார்ப்பு பாத்திர தொழிலாளர்களுக்கு  10 சதவிகிதம் கூடுதலாக 40 சதவிகிதமும்  சம்பள உயர்வு வழங்க சம்மதம் தெரிவித் தனர். இதை தொழிற்சங்க கூட்டமைப்பின ரும் ஒப்புக்கொண்டு பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டது. இதேபோல் எவர்சில்வர் பாத்திர தொழி லாளர்களுக்கு கடைசி கட்ட பேச்சுவார்த் தையின் போது தொழிற்சங்கங்கள் 40 சத விகிதம் சம்பள உயர்வு கேட்டிருந்த நிலை யில், சனியன்று நடந்த பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர்கள் தரப்பில், 17 சதவிகிதம் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொழிற் சங்கத்தினர் ஏற்கவில்லை. இதனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.  பித்தளை பாத்திர தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டிருந்த நிலையில், எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படா தது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆத்துப்பாளையம் ரோட்டில் பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகி கள் தெரிவித்துள்ளனர்.