tamilnadu

img

பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா: திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடல்

திருப்பூர், ஜூன் 27- சென்னை மாநகரக் காவலில் பணியாற் றும் பெண் உதவி ஆய்வாளர் திருப்பூருக்கு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இதைய டுத்து அவரது கணவர் உதவி ஆய்வாளராக பணியாற்றும் திருப்பூர் வடக்குக் காவல் நிலையம் மூடப்பட்டது. சென்னை மாநகரக் காவலில் பணியாற் றும் பெண் உதவி ஆய்வாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். அவரது கணவர் திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார்.

சென்னையில் இருந்து வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைய டுத்து அவரது கணவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. இருப்பினும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதாலும், காவலர்க ளுக்கு இடையே தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாலும் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் திருப்பூர் வடக்குக் காவல் நிலையம் மூடப்பட்டது.

மேலும், மாநக ராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் காவல் நிலைய வளாகம், அங்கிருந்த வாக னங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் முக்கியத்து வம் வாய்ந்த வடக்கு காவல் நிலையம் மூடப் பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.