tamilnadu

img

எல்லா வகையிலும் எதிர்க்க வேண்டிய தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்! திருப்பூர் மாநாட்டில் பிரின்ஸ் கஜேந்திரபாபு முழக்கம்

திருப்பூர், ஜூலை 29 – இந்தியாவின் அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, மாநில அரசு உரிமை, குழந்தைகளின் உரிமை, தனி மனித உரிமை என எல்லாவற்றுக்கும் எதிரான தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிகளுக்கான மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறி னார். திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை தேசி யக் கல்விக் கொள்கை 2019 எதிர்ப்பு மாநாடு தமுஎகச மாவட்டத் துணைத் தலைவர் மா.நாட்ராயன் தலைமை யில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கருத்துரை வழங்கிய பிரின்ஸ் கஜேந் திரபாபு பேசுகையில் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கல்வியாளர்கள், பேராசிரி யர்கள், மாணவர்கள் உள்ளிட்ட எந்த அமைப்பினரிடமும் கருத்துக் கேட்க வில்லை. நம் நாட்டில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பின்னும் சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலை உள்ளது. முழுமையான எழுத் தறிவு பெறாத நிலையில் உழைப்பை மட்டும் நம்பி வாழும் மக்கள் இருக்கி றார்கள். அவர்கள் ஒப்புதல் தேவை யில்லையா? இந்த கல்விக் கொள் கையை வரையறுத்த குழு அரசமைப் புச் சட்டத்தை மீறி இருக்கிறது.  ஆங்கிலத்தில் 484 பக்கம் இருக்கும் வரைவு அறிக்கை தவிர, அதன் உள் ளடக்கத்தைச் சுருக்கி 43 பக்கத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இதில் ஒன்றுக்கொன்று முரணான அம்சங்கள் உள்ளன. எதை நம்புவது? சாத்தியப்பட்டால் தாய்மொழி பயிற்று  மொழியாக இருக்கும் என கூறப்பட் டுள்ளது. பல இடங்களில் சாத்தியப் பட்டால், முடிந்தால் என்ற வார்த்தை களைப் பயன்படுத்தி உள்ளனர். தேசிய கல்வி ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு அதிகா ரத்தைக் கொடுக்கின்றனர். கல்வி ஆளுமைகளுக்குப் பதிலாக அதிகா ரத்தில் இருப்போர் இதைக் கட்டுப் படுத்துவார்களாம். பல்கலைக்கழகங்களை கட்டுப் படுத்துவது முழுமையாக மாநில அரசின் உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் தலைமையில் சில மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தேசிய கல்வி ஆணையம் அதிகாரம் பெற்றதாக இருக்கும் என சொல்லி இருப்பது, மாநில உரிமை களைப் பறிப்பதாக உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல் கலைக்கழகங்களை இனி மத்திய அரசு கட்டுப்படுத்தப் போகிறது. மாநில கல்வி அமைச்சர் பதவியில் இருப்போர் அதிகாரம் இல்லாதவர்களாக இருப் பார்கள். அம்மா ஆட்சி நடத்துவதாகச் சொல்வோர் இதை ஏற்கிறார்களா?  நாசாவால் கண்டுபிடிக்க முடியாத விசயத்தை, சந்திரனின் நீர் இருப்ப தற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித் தது நம் மயில்சாமி அண்ணாதுரை. தாய்மொழி வழிக் கல்வி கற்றவர். சந்தி ரன் உள்ளே போய் ஆய்வு செய்யும் சந் திராயன் 2ஐ அனுப்பியவர் தாய்மொழி  வழி தமிழ்க் கல்வி கற்ற சிவன். ஆனால் இப்போதைய கல்வி முறையில் எது வுமே இல்லாதது போலப் பேசுகி றார்கள். யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என தேசங்களின் நாடாக இருக்கும் இந்தி யாவை, ஒரே தேச நாடாகப் பார்க் கிறது இந்த கொள்கை. குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் கல்வித் திட்டம் என கூறப்பட்டு இருக்கும் பகுதியை நகரத்திலும், கிராமங்களிலும் இருக்கும் பெற்றோர் களிடம் கருத்துக் கேட்டால் அவர்கள் ஏற்க மாட்டார்கள். 3ஆம் வகுப்பில் இருந்து முது முனைவர் பட்டம் வரை கல்வியுடன் தொழிற்பயிற்சி பிரிக்க முடியாத பகுதியாம்.பள்ளிப் படிப்பில் தோட்டக்கலை, மண்பாண்டம் செய் தல், மர தச்சு வேலை, மின்சார வேலை  போன்ற பயிற்சிகளை குழந்தைக ளுக்குப் பாதுகாப்பான வயதில் கொடுப்பார்களாம். இதில் பயிற்சி பெற்றால் குழந்தைகளுக்கு தொழி லில் ஆர்வம் வருமாம். மரபு சார்ந்த  தொழில்களைப் பாதுகாக்கின்றார் களாம். இதனால் குழந்தைகள் படிப் பில் ஆர்வம் வருமா? குழந்தைகள் படிக்க மாட்டார்கள்.  9 முதல் 12ஆம் வகுப்பு வரை 8 பரு வத் தேர்வுகள் (செமஸ்டர்) பல முறை விடுபட்டு, பலமுறை எழுதலாம் என கூறுகின்றனர்.  இதன் மூலம் 12ஆம் வகுப்பை பலர் தாண்டமாட்டார்கள்.  இதையும் மீறி தேர்ச்சி பெற்றாலும் கல்லூரிக்குச் செல்ல தேசிய திறனறி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சியடைய வேண்டும். கல்லூரிகளை மூன்று  வகையாக பிரித்து கலை அறிவியல் கல்லூரிகளை பல்நோக்கு கல்லூரிக ளாக மாற்றப் போகிறார்களாம். 2032க்குள் அவை தகுதியுடையவை ஆக மாறாவிட்டால் முதியோர் கல்வி, நூலகம் போன்ற வேறு பயன்பாட் டுக்கு அந்த கல்லூரிகளை மாற்றி விடு வார்களாம். அதாவது பல அரசுக் கல் லூரிகளை மூடிவிடுவோம் என்று சொல்லாமல் சொல்கின்றனர். காம ராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் உருவாக்கிய கல்லூரிகளை மூடு என்று சொல்வதற்கு இவர்கள் யார்? புதிய கல்விக் கொள்கை கூட் டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, சமூகநீதிக்கு எதிரானது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, மாநில உரிமைக்கு எதிரானது, ஏழை, எளிய சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தக் கூடியது, குழந்தைப் பருவத்தை குழந்தைகள் அனுபவிக்கும் உரிமையைப் பறிக்கக் கூடியது ஆகவே இந்த கல்விக் கொள் கையை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். வரலாற்று ஆய்வாளர் செந்தலை ந.கவுதமன் பேசுகையில், ஒரு சமூ கத்தை அடிமைப்படுத்த மொழியை யும், கல்வியையும் அடிமைப்படுத்தி னால் போதும், அந்த சமூகம் அடிமை யாகும். வகுப்பறையில் இருந்துதான் ஒரு சமூகம் பிறக்கிறது. வகுப்பறை சீரழிக்கப்பட்டால் ஒரு சமூகத்தைச் சீரழிக்கலாம். இப்போது முன்மொழிந் துள்ள கல்விக் கொள்கையில் இந்தி யோடு சமஸ்கிருதத்தையும் திணிக்கப் பார்க்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. ஏற்கெனவே இந்தியைத் திணிக்கப் பார்த்த காங்கிரஸ் விரட் டப்பட்டது. அதுபோல் இப்போது இந்தியோடு சமஸ்கிருத மொழியை யும் திணிக்க முயலும் பாரதிய ஜனதா  கட்சி தமிழகத்தில் அழித்து, அப்புறப் படுத்தப்படும். 1976இல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசை வுப் பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டது. அது மீண்டும் மாநிலப் பட்டி யலுக்கு வர வேண்டும். இந்தியாவில் தமிழ் மொழி மட்டுமல்ல, இங்கிருக்கும் 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்ற வேண்டும்.  அதன் மூலம்  நாம் இழந்த உரிமையை மீட் போம் என்று கூறினார்.