அவிநாசி, ஜூன் 12- அவிநாசி அருகே சாதிய வன்கொடு மைக்குள்ளானதாக புகார் அளித்த தலித் இளைஞரையே காவல்துறை கைது செய் ததை கண்டித்து வியாழனன்று அவிநாசி காவல் நிலையம் முன்பு சாதி ஒழிப்பு கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25). இவர் வளர்த்து வந்த ஆட்டு குட்டி வீட்டிற்கு அருகில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்திற்குள் சென் றுள்ளது. இதையறிந்த லோகநாதன் தனது ஆட்டுக் குட்டியை மீட்க சென்றபோது தோட்டத்து உரிமையாளர் பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் லோகாநாதனை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசி தாக்கி யதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மே13 ஆம் தேதியன்று அவிநாசி காவல் நிலை யத்தில் லோகநாதன் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை யில், துணைக் காவல் கண்காணிப்பாள ரிடம் மீண்டும் புகார் அளித்தார். இதையடுத்து, பிரவீன் உள்பட 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது செய் யப்படவில்லை. இச்சூழலில், பாதிக்கப் பட்ட லோகநாதனையே அவிநாசி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து சாதி ஒழிப்பு கூட்டமைப்பினர் அவிநாசி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ், மகாலிங் கம் மற்றும் சாதிய ஒழிப்பு கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.