tamilnadu

விவசாய விரோத மத்திய சட்டங்கள் எதிர்ப்பு தொடர் போராட்டம் திருப்பூரில் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

திருப்பூர், ஜூலை 5 – மத்திய அரசு கொண்டு வந் துள்ள விவசாய விரோத சட்டங் களுக்கு எதிரான தொடர் போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வ தற்காக திருப்பூர் மாவட்டத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது.

தமிழக விவசாயிகளின் இல வச மின்சாரத்தைப் பறிக்கும் மத் திய மின்சார சட்டத் திருத்தம் மற் றும் விவசாயத்தை கார்ப்ரேட் மய மாக்கி விவசாயிகளை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம்,  விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்மை சேவை மீது ஒப்பந்த அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு வலியுறுத்தி உள் ளது.

மேலும் தமிழகத்தில் இல வச மின்சார உரிமைப் பாது காப்பு இயக்கம் மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்வதற்கு தொடர் போராட் டத்தை நடத்தவும் முடிவு செய் துள்ளது. குறிப்பாக மாநிலம் தழு விய அளவில் ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் மற்றும் ஜூலை 27ஆம் தேதி கருப்புக் கொடி ஏற்றும் போராட்டங்களை அறி வித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்ல கடந்த ஜூலை 2 ஆம் தேதி திருப்பூர் பி.ஆர்.நிலையத் தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் விவ சாயிகள் பாதுகாப்புச் சட்ட மாநி லத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவ னர் மு.ஈசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், மாவட்ட நிர்வாகிகள் எஸ். வெங்கடாசலம், வை.பழனிச் சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட துணைத்தலைவர்  ஜி.கே. கேசவன், திமுக விவசாய அணி மாநகர செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். உழவர் உழைப்பாளர் கட்சி, மதி முக விவசாய அணி, கொ.ம.தே.க விவசாய அணி நிர்வாகிகள் இக் கூட்ட முடிவிற்கு ஆதரவு தெரி வித்திருந்தனர்.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வின் முடிவுகளை வழக்கறிஞர் மு.ஈசன் விளக்கிக் கூறினார்.  இதையடுத்து இக்கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய விரோத, கார்ப்ரேட் ஆதரவு முடிவுக்கு இக் கூட்டத்தில் வன்மையான கண்ட னம் பதிவு செய்யப்பட்டது. மத்திய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயத்திற்கான இல வச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். விவசாயிகள் விவசா யத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். மின் கட்டணம் கடு மையாக உயரும். மாநில உரிமை கள் பறிக்கப்படும்.

அதேபோல் இதர மூன்று சட்டங்களும் இந்திய விவசாயத்தில் பன்னாட்டு கம்பெ னிகள் படையெடுத்து ஆக்கிர மிக்க வழிவகுக்கும். விவசாயி களைப் பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங் கள் ஆதரவு கேட்டுப் பெறுவது, இப்போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்த, கோரிக்கையை ஏற்கும் அனைத்து விவசாய அமைப்பு களையும் இணைத்துக் கொண்டு செயல்படுவது, தாலுக்கா அள வில் செயல் கமிட்டிகள் அமைத்து, அனைத்து ஊராட்சிகளிலும் கையெழுத்து இயக்கம், கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வது என்றும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இப்போராட்டத்தை ஒருங்கி ணைக்க, திருப்பூர் மாவட்டத்தில் ஆர்.குமார் ஒருங்கிணைப்பாள ராக தேர்வு செய்யப்பட்டார்.

அமைப்புக்கு 2 பேர் இணைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.