tamilnadu

img

நெல்லை கண்ணன் கைதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜன.2- எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடி யுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசி யதற்காக நெல்லை கண்ணன் மீது வழக்கு பதியபட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இதை கண்டித்தும் நெல்லை கண்ணன் மீது உள்ள வழக்கு களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா வில் மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையில் ஆர்ப்பாட்டம் வியாழனன்று மாலை நடைபெற்றது பாப்புலர் பிரண்ட் மாநிலச் செயலா ளர் முஹைதீன், எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் அஹ்மது நவ்வி, மார்க் விஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். முஸ் லிம் லீக் மாவட்டத் தலைவர் மீரான் முஹைதீன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஷாஹுல் ஹமீத் உஸ்மானி, மாவட்டச் செய லாளர்கள் ஹயாத் முஹம்மது, பேட்டை முஸ்தபா முல்லை மஜித் பர்கிட் அலாவுதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால், வழக்க றிஞர் அணி மாவட்டச் செயலாளர் ஆரிப் சுல்தான், பாளை தொகுதி தலை வர் மின்னதுல்லாஹ், செயலாளர் புகாரி சேட் நெல்லை தொகுதி தலை வர் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.