தூத்துக்குடி, ஜூன் 23- தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்ய ப்பட்டு இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு ஸ்கோச் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்திலிருந்து தூத்து க்குடி மாவட்டம் கலந்து கொண்டு, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாவ ட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளின் புகை ப்பட ஆதாரங்கள் மற்றும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பரப்புரை பணிகள் ஆகிய விப ரங்களுடன் திறந்த வெளி யில் மலம் கழித்தல் அற்றல் என்ற தலைப்பில் பிப்.6 அன்று தலைநகர் தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் விளக்கவுரை நிகழ்த்தப் பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டதால் தூத்துக்குடி மாவட்டம் காலி றுதிக்கு ‘ஆர்டர் ஆப் மெரிட்’ விருதிற்கு தேர்வு செய்யப் பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கம் குறித்த ஆவணத் தொகுப்பு ஸ்கோச் இணைய தளத்தில் இ-எக்சிபிசன் ஆக பொதுமக்களின் பார்வை யிட்டு மதிப்பீடு செய்து வாக்கு அளிக்கும் வகையில் வெளி யிடப்பட்டது. இதில் தூத்து க்குடி மாவட்டம் அதிக வாக்கு கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. பின்னர் இ-ஸ்கோச் (E-SKOCH) விருது வழங்கும் விழாவில் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக பங்கேற்கும் நிகழ்வு தில்லி யில் ஜூன் 20 அன்று நடை பெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொ ள்ளப்பட்ட தூய்மை பாரத பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ப்பட்டு, வாக்குகள் அளிக்க ப்பட்டதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்ய ப்பட்டு ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’, ‘ஸ்கோச் கோல்டு’ ஆகிய இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.