9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணி
சென்னை, ஜன.25- புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட் டங்களில் வார்டு மறு வரை யறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 9 மாவட்டங்க ளிலும் 3 மாதங்களில் தேர்தலை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதிகாரிகளு டன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை வரைவுப் பட்டியலை பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரித்து அரசியல் கட்சி களின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்றும் பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் மறுவரை யறைப் பணிகளை முடித்து அர சாணை வெளியிடும் வகையில் பணி களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.