tamilnadu

img

கொரோனாவுக்கு எதிரான மருத்துவ ஆராய்ச்சி... ஐசிஎம்ஆரின் அனுமதி கோரும் கேரள அரசு

திருவனந்தபுரம்: 
கொரோனாவுக்கு எதிரான மருத்துவ ஆராய்ச்சியை கேரள சுகாதாரத்துறை மூலம் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JNDPGRI) சமர்ப்பித்துள்ள திட்டத்திற்கு ஐசிஎம்ஆர்-இன் அனுமதி கோரப்பட்டுள்ளது.

சிக்குன்குனியா, டெங்குவுக்கு எதிராக கண்டுபிடித்த ‘வைரஸ் தடுப்பு மருந்தை’  கொரோனாவுக்கு  எதிராகவும் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு நடத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூன்று மூலிகைகளில் நடத்திய பரிசோதனையே சிக்குன்குனியாவுக்கும் டெங்குவுக்கும் எதிரான வைரலை கண்டுபிடிக்க உதவியது. அந்த அனுபவத்தின் அடிப்படையில்  கொரோனாவு க்கான தற்போதைய மருத்துவ பரிசோதனைக்கும் ஜேஎன்டிபிஜிஆர்ஐ தகுதி பெற்றுள்ளது. பழங்குடி மக்கள் அளித்த மூலிகை செடிகள் குறித்த தகவலின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. மூன்று மூலிகைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுத்தப்பட்ட ஒரு வைரஸ் தடுப்பு மருந்து சிக்குன்குனியா மற்றும் டெங்குக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதற்கான காப்புரிமை பெறும் முயற்சி நடந்து வருகிறது.  

இந்த ஆன்றி வைரல் கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும் என்கிற முடிவின்படி இந்த மருந்து சோதனைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை கேரள சுகாதாரத்துறை செயலாளர் ஐசிஎம்ஆரிடம் ஒப்படைத்தார். இதில் ஐ.சி.எம்.ஆர் ஆர்வம் தெரிவித்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சோதனை தொடங்கும். இதோடு உலக சுகாதார நிறுவனம், கியூபா மருந்துகள் என நான்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு கேரள அரசு ஒப்புதல் கோரியுள்ளது.