tamilnadu

தேனிக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி எங்கே? என்ன செய்கிறார் மக்களவை உறுப்பினர்

தேனி, ஆக.2- தேனி மாவட்டத்தில் 23 ஆண்டுகளாக எதிர்பார்க்கப் படும் மத்திய அரசின்  கேந்திரிய வித்யாலயா பள்ளி வருவதற்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் நடவ டிக்கை எடுப்பாரா என மக்கள், மத்திய அரசு ஊழியர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர். தேனி  மாவட்டம் உதயமாகி 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முழுமையான மாவட்ட அந் தஸ்தை பெறவில்லை. மத்திய அரசின் பல முக்கிய அலுவலகங் கள் இன்னும் தேனிக்கு வர வில்லை. மூன்றாண்டுகளுக்கு  முன்பே  கேந்திரிய வித்யாலயா பள்ளி தேனியில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது வரை அது வரவில்லை.  தேனி மக்களவை உறுப்பின ராக இருந்த பார்த்திபன் கேந்தி ரிய வித்யாலயா பள்ளி தொடங்க முயற்சி மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடா சலம் மூலம் பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்வதிலும், உயர் அதி காரிகளை அழைத்து வந்து பார்வையிடச் செய்தார். கடந்த 2018-ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியகுளம் வடவீரநாயக் கன்பட்டியில் அரசுக்கு சொந்த மான நிலம் தேர்வு செய்து  மத் திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட் டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு சென்றனர்.

தற்போதைய மாவட்ட ஆட்சி யர் பல்லவி பல்தேவ் 2019-ஆம் ஆண்டு முதல் கேந்திரிய வித்யா லயா பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்பு உள்ளதாக உறுதி படத்  தெரிவித்தார்.  கடைசியாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில்  50 புதிய கேந்திரிய வித்யா லயா பள்ளிகள் அமைக்க அனு மதி அளித்தது. தேனிக்கு பள்ளி தொடங்க அனுமதி கிடைக்க வில்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தில் அதிமுக சார்பில் போட்டி யிட்ட துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார், கேந்திரிய வித்தியா லய பள்ளி உட்பட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்குறித்து ஒருமுறை பேசியதோடு சரி.அவ ரும் மறந்து விட்டார். துணை முதல்வர் தேனி மாவட் டத்திற்கு வந்தால் அவர் பின்னால் வந்து செல்லும் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் இந்தாண்டு முதல் தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.