தேனி, மார்ச் 8- தேனி பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி பாண்டிச்செல்வி (23). இவரும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த காசிராஜனும் காதலித்து திரு மணம் செய்து கொண்டனர் .காசிராஜன் மற்றும் அவரது தந்தை சமையன், தாய் பஞ்சவர்ணம், சகோதரர்கள் முத்துக் குமார், கார்த்திகேயன் ஆகியோர் வர தட்சணை கேட்டு பாண்டிச் செல்வியை கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் நகை, பணம் கொண்டுவந்தால் குடும்பம் நடத்த முடியும், இல்லாவிட்டால் காசிராஜ னுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாண்டிச்செல்வி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன் பேரில் தேனி மகளிர் காவல்நிலையத்தில் காசிராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.