tamilnadu

img

தோழர் பி.ராமகிருஷ்ணன் காலமானார்

தேனி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி நகர்  முன்னணி தோழர் பி.ராமகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திங்களன்று அதிகாலையில் உயிரிழந்தார்.போடி கல்லூரியில் பயிலும் போது இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்ட ராமகிருஷ்ணன் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,தமுஎகச போன்ற அமைப்புகளில் நிர்வாகியாகவும் ,கட்சியின்  தேனி நகர் கிளை செயலாளராகவும். தாலுகாக்குழு உறுப்பினராகவும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் ஆவார்.

கட்சியின் நீண்ட நாள் தீக்கதிர் வாசகர் ஆவார்  இவரது மறைவுச்செய்தி அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனிமாவட்ட மூத்ததலைவர் கே.ராஜப்பன், தாலுகாச்செயலாளர் சி.சடையாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, பி.மணவாளன், இ.தர்மர் மற்றும் தமுஎகச தலைவர்கள்  தேனிசீருடையான், அல்லிஉதயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேனி மாவட்டச்  செயலாளர் சி.முனீஸ்வரன், தேனி தாலுகாத் தலைவர் எம்.முத்துக்குமார், இந்திய மாணவர் சங்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் டி.நாகராஜ், சமூக நல்லிணக்கப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முகமது சபி மற்றும் வி.செல்வராஜ், எஸ்.கண்ணன், பி.சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்து இறுதி மரியாதையை செய்தனர் .தேனி மயானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்று மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.