தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் ஜூலை 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் மாநில தலைவர் ஏ.லாசர் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு. மாநில பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், தேனி மாவட்டத் தலைவர் எஸ்.மொக்கராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.