tamilnadu

தஞ்சாவூர், நாகை முக்கிய செய்திகள்

தஞ்சையில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு 
தஞ்சாவூர், செப்.26- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தற்போது கண்டறியப்பட்டது. இதையடுத்து வியா ழக்கிழமை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும் நேரில் பார்வையிட்டு அவர்களது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் குமுதாலிங்கராஜ் கூறியதாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு காய்ச்சல் வந்து 28 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்க ளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மருத்துவ குழுவினர் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த தேவையான மருந்து, மாத்திரை கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் போதியளவு இருப்பு உள்ளது. காய்ச்சல் வந்தவர்களுக்கு தினமும் நிலவேம்பு கசாயம், கஞ்சி, சுடுநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது மருத்துவ மனை கண்காணிப்பாளர் பாரதி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

நாகை கொள்ளிடம் ஆற்று கரையில் மீண்டும் உடைப்பு 
சீர்காழி, செப்.26-நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை, கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து காட்டூர் வரை 15 கிமீ தூரத்துக்கு பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.  சென்ற வருடம் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றின் கரை பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.  இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் நேரில் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. உடனடியாக சாலையில் பல இடங்களில் சவுக்கு கட்டைகள் மணல் மூட்டை கள் பயன்படுத்தப்பட்டு உடைப்புகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்காலிக உடைப்புகளை நிரந்தரமாக சரி செய்ய இது வரை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ஆற்றின் வலது கரையில் பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு அடைக்கப்பட்ட அதே இடங்க ளிலேயே மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் நெருங்கி விட்டதால், பல இடங்களில் ஆற்றங்கரை சாலையில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மீண்டும் அதிக அளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வரும் வாய்ப்பு ஏற்பட்டால், ஆற்றங்கரை சாலையில் உடைப்பு ஏற்பட்டால், கரையோர கிராமங்களுக்கு பெரும் சேத ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே உடனடியாக கொள்ளிடம் ஆற்றின் கரையை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோர கிராமங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.