tamilnadu

img

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தண்ணீர் தொட்டி

கும்பகோணம், நவ.9- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புளியம்பாடி கிளை சார்பில்  டெங்குவை கட்டுப்படுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. நிகழ்விற்கு கிளை தலைவர் பிரபஞ்சன் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராமன், பள்ளி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பாலாஜி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளியில் பயனற்று, மாண வர்களின் உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த தண்ணீர் தொட்டி வாலிபர் சங்கத்தின் பல கட்ட போராட்டங்களின் விளைவாக டெண்டர் விடப்பட்டு ஒரு வருடத்திற்கு முன்பு இடிக்கப்பட்டு வகுப்பறையின் முன்பு போடப்பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆன போதும் அதன் பகுதிகளை அப்புறப்படுத்தாத நிலையில் கம்பிகள் நீட்டிக் கொண்டும், பாம்புகள் சூளும் பகுதியாகவும் உள்ளது. எனவே  மாணவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக பள்ளி வளாகம் மாறி வருவதால்  இடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் பகுதிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.