tamilnadu

img

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துக.... சிபிஎம், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்....

தஞ்சாவூர்:
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அரசு மணல் குவாரியில் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாலும், கனரக வாகனங்கள் மூலம், சட்ட விரோத தனியார் மணல் கொள்ளையினாலும் இப்பகுதியில், இயற்கை வளம், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. 

எனவே, சட்ட விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு மணல் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பூதலூர் அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பி.முருகேசன், காங்கிரஸ் கவுன்சிலர் படுகை ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.