கும்பகோணம், ஆக 6- கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டுமான பணி களுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். ஆனால் தற்போது மணல் குவாரி நிறுத்தப் பட்டது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வா தாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட சிஐடியு சார்பாக திருப்புறம்பியத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோ சனை கூட்டம் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன் விவசாய தொழி லாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி ஊராட்சி கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கட்டிடப் பணிக்கு மணல் எடுத்துச்செல்ல மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி வருகிற 11-ஆம் தேதி சிறப்பு பேரவை நடத்து வது, மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது காவல்துறை போடப்படும் பொய் வழக்கு மற்றும் கைது போன்ற நடவ டிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.