கும்பகோணம், ஆக.8- ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசாணை 343, 28.11.2007 படி சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் ரூ. 6,786 வழங்கிட வேண்டும். ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.4,856 வழங்கிட வேண்டும். 28.11.2017-லிருந்து 31.7.2019 வரை ஓஎச்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்பு ரவு தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திரு விடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமல்படுத்தா ததை கண்டித்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.ஜே.ஜேசு தாஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் சா.ஜீவபாரதி, என்.பி.நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சேகர், ஜி.பக்கிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருவிடைமரு தூருக்கு உட்பட்ட 48 ஊராட்சிகளிலும் உள்ள தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலு வலர், தொழிலாளர்களை சந்தித்து அரசாணைப்படி ஊதி யம் வழங்கப்படும் என்றும் தொழிலாளர்களுக்கு நிலு வைத் தொகையை இம்மாத இறுதிக்குள் அவர்களது கணக்கில் செலுத்தப்படும் என்றும் பணியாளர்களின் பணி பதிவு முறைப்படி செயல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்தார். போராட்டத்திற்கு முன்பாக திருவிடைமருதூர் சிபிஎம் அலுவலகத்திலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக கோரிக்கையை முழக்கமிட்டு வந்தனர்.