தஞ்சாவூர், ஜூன்.28- கொரோனா ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜூன் .27 சனிக்கிழமை தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர், சங்க நிர்வாகிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழை த்திருந்தார். இதையடுத்து ஜூன் 26 (வெள்ளி க்கிழமை) அன்று டாஸ்மாக் மாவட்ட மேலா ளர் அலுவலகத்தில், அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மாவட்ட மேலாளர், துணை மேலாளர், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க.வீரையன், மாவட்டத் தலைவர் ஜெ. ரமேஷ், மாவட்ட பொருளாளர் மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் ச.ஆறுமுகம் மற்றும் ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட மேலாளர், “ஊழியர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று பணி வழங்குவதாக” உறு தியளித்தார். இதையடுத்து, ஜூன் 27 சனிக்கிழமை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.