tamilnadu

img

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராம இளைஞர்கள், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. பழனிவேல் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார். முத்துவைரவன், மெய்யப்பன், முகமதுகனி, முத்துவேல், அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 7 மருத்துவர்கள் கொண்ட குழு இதயவியல் மருத்துவம் கண் மருத்துவம் போன்றவைக்கு 250 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர். 12 பேருக்கு காது கேட்டும் கருவிகளை குகன் வழங்கினார். முகாமில் ஆனந்தன், சுப்புரெத்தினம், குருவிக்கரம்பை இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.