தஞ்சாவூர், பிப்.22- தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். முகாமில் 167 பேர் புறநோயாளிகளாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இவர்க ளில் 34 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, தஞ்சை அரசு இராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர். அங்கு, தலைமை கண் மருத்துவர் ஞானசெல்வம் தலைமையிலான, மருத்துவக் குழுவினரால் நவீன பேக்கோ முறையில் அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, தேவையான மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.