தஞ்சாவூர், நவ.24- தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவம்பர் 29 அன்று காலை 10 மணிக்கு ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப் பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். மேலும், கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை தங்களின் பெயரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.