கும்பகோணம், ஜூலை 11- கொரோனோ நோய்தொற்றை கட்டுப்ப டுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மத்திய அரசு நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்க உத்தரவிட்டது. ஆனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா கீரனூர் ஊராட்சியில், கடந்த ஜூன் மாதம் மத்திய அரசால் வழங்கப்பட்ட கொ ரோனா கால இலவச அரிசி வழங்கப்பட வில்லை. இதுகுறித்து சிபிஎம் கட்சியினர் பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் ஜூலை 10 அன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் தீக்கதிர் நாளிதழில் ‘கொரோனா கால இலவச அரிசி எங்கே’ என்ற தலைப்பில் செய்தி வெளி யானது. இதனை தொடர்ந்து கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல்துறை யினர் கூட்டுறவு சங்க வழங்கல் அதிகாரி கள் போராட்டக் குழுவினரை அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். இதில் கும்பகோ ணம் வட்டம் கீரனூர் ஊராட்சிக்கு உடனடியாக இரண்டு தவணையாக ஜூன் மற்றும் ஜூலை மாத கொரோனா கால கூடுதல் அரிசியை உடனே வழங்கவும், ஜூன் மாத அரிசி கொடு க்கப்படாமல் இருந்ததற்கான காரணங்களை கண்டறிந்து தவறு செய்த ஊழியர்கள் மீது நட வடிக்கை எடுப்பது எனவும் அதிகாரிகள் உறுதி யளித்தனர். அதனால் முற்றுகைப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.