tamilnadu

சிற்றுந்து விபத்து:  பயணிகள் படுகாயம்

 தஞ்சாவூர், நவ.3- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், உமையாள்புரம் கிராமத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் பாபநாசத்திலிருந்து புள்ளப்பூதங்குடிக்கு சுமார் 30 பயணிகளுடன் சென்ற சிற்றுந்து சாலையோரம் வயலில் கவிழ்ந்தது. இதில் 4 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டு, அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை, வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அப்போது கும்ப கோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ராம நாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.