சென்னை, நவ.20- மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஏ.டாயல் உடல்நலக்குறை வால் சென்னையில் புதனன்று (நவ. 20) காலமானார். அவருக்கு வயது 80. எழுபதுகளில் சித்ராலயா, தமிழ் முரசு பத்திரிகைகளில் பணியைத் தொடங்கிய ஆர்.ஏ. டாயல், தினசரி, தினத்தூது, மாலைமுரசு, மணிச்சுடர் என பல்வேறு நாளிதழ்களில் பணி யாற்றியவர். நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக பத்திரி கைத்துறை, திரைப்படத்துறை என முத்திரை பதித்தவர். சின்னப்பூவே, மெல்லப்பேசு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர்.
சன் நியூஸ் தொலைக்காட்சி யிலும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியிலும் முதன்மை ஆசிரியராக இருந்தவர். ‘கலைஞர் செய்தி’களில் பத்து ஆண்டுகள் முதன்மை ஆசிரியராக இருந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலி வுற்றிருந்த ஆர்.ஏ.டாயல் தனி யார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி புத னன்று(நவ.20) காலமானார். சென்னை கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும் உடலுக்கு அர சியல் கட்சித் தலைவர்கள், பத்திரி கையாளர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். வியாழனன்று (நவ.21) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்டாலின் இரங்கல்
டாயல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நாளி தழ் மற்றும் தொலைக்காட்சிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மூத்த பத்திரிகை யாளர் டாயல் மறைவு பத்திகை உலகத்துக்கு ஈடு செய்ய முடி யாத இழப்பு எனக் கூறியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலா ளர் பாரதி தமிழன் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “டாயல் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்வதோடு அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரு டனும் துயரத்தை பகிர்ந்து கொள் கிறது” என்று தெரிவித்திருக்கி றார். டாயல் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூஜே)மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன், சென்னைப் பத்திரிகையாளர் சங்க (எம்.யூ.ஜே) தலைவர்க ளும் ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ளனர்.