சென்னை, ஜூலை 19 - மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய தமிழ்வளர்ச்சி துறை அமைச் சர் க.பாண்டியராஜன், பின் னர் புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது, அருட்பெருஞ் சோதி வள்ளலார், தேவ நேயப் பாவாணர், காரைக் கால் அம்மையார், வீரமா முனிவர் ஆகியோர் பெயரில் புதியவிருதுகள் தோற்று விக்கப்பட்டு ஆண்டு தோறும் வழங்கப்படும். பிறமொழி கலப்பின்றி வெளிவரும் நாளிதழ், வாரஇதழ், திங்க ளிழ்த் தேர்வு செய்து ஆண்டு தோறும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பெயரில் விருது வழங்கப்படும் என்றார். வாரணாசி இந்துப் பல் கலைக் கழகத்தில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்கப்ப டும். செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் அகர முதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ‘சொல் வயல்’ என்ற மாத இதழ் வெளி யிடப்படும். என்றும் அவர் கூறினார்.