tamilnadu

img

உலக திரைப்பட விழா நிறைவடைந்தது

திருவண்ணாமலை, அக்.21- திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர்  க.சு. கந்தசாமி துவக்கி வைத்தார்.  5 நாட்கள் நடந்த இந்த விழாவில் எகிப்து, ருஷ்யா, மெக்சிகோ, லெபனான், மலையாளம், தமிழ் உள்ளிட்ட 22 திரைப்படங்கள் திரையிடப் பட்டது.  ஞாயிறன்று(அக்.20) நடைபெற்ற நிறைவு விழாவுக்கு பிரளயன் தலைமை தாங்கினார்.  மாவட்டத் தலைவர் கவிஞர் ஆரிசன் வரவேற்றார். மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், இயக்குநர்கள் எம்.சிவக்குமார், லெனின் பாரதி, கவுரவத் தலைவர் ச.தமிழ்செல்வன், மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, மாவட்டச் செயலாளர் மு.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். அ.செந்தில்குமார் நன்றி கூறினார். அடுத்த திரைப்பட விழா ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டது.