சென்னை
ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜிப்ஸி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை பாராட்டியுள்ளார். ‘’மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார் கமல்.