பாடகர் டி.எம்.கிருஷ்ணா அழைப்பு
சென்னை, செப். 27- தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் அனைத்து தரப்பின ரும் பங்கேற்க பாடகர் டி.எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்துள் ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மும், சென்னை கேரள சமாஜ மும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவை நடத்து கின்றன. இந்த விழா அக்.2 முதல் 6 ஆம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள சமாஜம் பள்ளியில் நடைபெறு கிறது. இவ்விழாவில் தென்மாநிலங் களைச் சேர்ந்த 32 நாடகக் குழுக்கள் 500 கலைஞர்களோடு நாடகங்களை நிகழ்த்துகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நாடகங்கள் நடக்கும். இந்த விழாவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்ட ணம் ஏதும் இல்லை.
இந்நிகழ்வு தொடர்பாக விழாக்குழு புரவலர் டி.எம்.கிருஷ்ணா வெள்ளியன்று (செப். 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல்முறை யாக சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடகவிழா நடக்க உள்ளது. அனைத்து வகையான நாடகக் குழுக்களும் விழாவில் பங்கேற்கின்றன. கலை, நாடக கலாச்சார கொண்டாட்டமாக நிக ழும் விழாவில் சென்னை நகர மக்கள் பங்கேற்க வேண்டும். கலை, கலைஞர்கள் மீது நிறைய தடைகள், கட்டுப்பாடு கள் விதிக்கப்படும் சூழலில் இந்த முற்போக்கு கலை நிகழ்வு நடக்கி றது. அரசியலமைப்புச் சட்டத் தின்படி, ஜனநாயக முறையில் சமூகம் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதுதான் முற்போக்கு. இத்தகைய சிந்தனை கொண்ட மக்கள், கலைஞர்கள் நடத்தும் விழா.
சமத்துவ சிந்தனையோடு பய மின்றி மக்கள் வெளிப்படையாக பேச வேண்டும். அத்தகைய தன்மையோடு விழா நடக்கிறது. சிந்தனையில், செயலில், நட வடிக்கைகளில் மிகப்பிரம்மாண்ட மான முறையில் நாடக விழா நடக்கிறது. நாடகத்துடன் விவாதம், உரை, இயக்குநர்களு டன் உரையாடல், கலைஞர்களு டனான விவாதமும் நடக்க உள் ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அழைக்கி றேன். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின்போது விழாக் குழு தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி, செயலாளர் நாடகவிய லாளர் பிரளயன், துணைச்செய லாளர் அசோக்சிங், கேரள சமாஜ நிர்வாகிகள் கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன். பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.