tamilnadu

img

ஊரடங்குக்கு பின் நீதிமன்ற பணி: கருத்துகேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை, ஏப்.6- ஊரடங்கு விலக்கப்பட்ட பின் நீதிமன்ற பணிகளை தொடங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளிடம் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக்களை கோரியுள்ளது.

ஊரடங்கால் நீதிமன்றப் பணிகள் நிறுத்தப்பட்டு அவசர வழக்குகளை மட்டும், நீதிபதிகள் வீடுகளில் இருந்து காணொளிக் காட்சிகள் மூலம் விசாரித்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பனின் சுற்றறிக்கையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் பணிகளை படிப்படியாக தொடங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் புதுச்சேரி முதன்மை நீதிபதி ஆகியோர் கருத்துக்களை அனுப்புமாறு கோரியுள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்க இருக்கும் காணொளி காட்சி விவாதத் தில் பங்கேற்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.