tamilnadu

img

குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்புடையதாக கருதப்படும் 9 பயங்கரவாதிகள் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளது. இதில் 359 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்றும் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. உலகை உலுக்கிய இந்த தாக்குதல் தொடர்பாக இலங்கையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்புடையதாக கருதப்படும் 9 பயங்கரவாதிகள் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள 9 பேர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகின்றனர் இவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்கும் படி இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.