சென்னை,நவ.26- அரசியலமைப்பு தினத்தில் மகாராஷ்டிரா வழக்கில் உச்ச நீதி மன்றம் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஆயத்தமான நிலையில், திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடி வுக்கு எதிராக சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், மகாராஷ்டிர சட்டசபையில் முதல்வர் பட்னாவிஸ் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பு தினமான நவ.26 அன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை எதிர்க்கட்சித் தலை வர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசி யலமைப்பு தினத்தில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜன நாயகத்துடனும், அரசியல் சட்டத்து டனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்பு கிறார்கள் என்று தெரிவித்திருக்கி றார்.