சேலம், மார்ச் 12- சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகில் உள்ள ஏரியில் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக விரோத செயலில் ஈடு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் தாலுகா குழு சார்பில் வியாழனன்று மனு அளிக்கப்பட் டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது, சேலம் மாவட்டம், வீர பாண்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட சேனைப்பாளையம் பகுதியில் பாட்டப்பன் கோவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணற்ற கருவேல மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் நடப்பட்டு தற்பொழுது செழிப்புடன் காணப்படுகிறது. இந் நிலையில் புதனன்று இரவில் சமூகவிரோதிகள் சிலர் ஐந்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். எனவே மரத்தை வெட்டி கொள்ளையடித்த சமூக விரோதிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வீர பாண்டி வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது. இதில் கிளை செயலாளர் சண்முகம், செல்வம் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் உடனிருந் தனர்.